Mohamed Farook Mohamed Farook Author
Title: செல்போனை சார்ஜ் செய்ய இனி மணிபர்ஸ் போதும்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் ...
நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும்.

இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கள் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போது இரண்டு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பெரிதாகவும், மணி பர்ஸுக்குள் மடித்து வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்விலை அமெரிக்காவில் ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top