Mohamed Farook Mohamed Farook Author
Title: பிரதமருடன் சந்திப்பு: டெல்லி செல்கிறார் ஜெயலலிதா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்வரும் 14ம் திகதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ...
தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்வரும் 14ம் திகதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடியுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

2014ம் ஆண்டு யூன் 3ல் பிரதமர் மோடியை ஜெயலலிதா சந்தித்தார். இதன் பிறகு 2015ம் ஆண்டு ஓகஸ்ட்டில் சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக பிரச்னைகள் தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளித்தார். தற்போது எதிர்வரும் 14ம் திகதி மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

பிரதமருடனான சந்திப்பின்போது முதல்வர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம், கச்சத்தீவு மீட்பு விவகாரம், உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீீர்வு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைப்பார் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் ஜெயலலிதா யூன் 14ம் திகதி காலை டெல்லி செல்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கிறார். அன்றைய தினமே முதல்வர் சென்னை திரும்புகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top