Mohamed Farook Mohamed Farook Author
Title: கம்யூனிஸ்ட்டை விட அதிக வாக்குகள் பெறுவோம் என்றுதான் கூறினேன் : ம.நா கூட்டணியை அல்ல: சீமான்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டுஅவர்களுடன் இணைவத...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டுஅவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்று தான் கூறினேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநிலபொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும்.

இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள்களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். அதற்குரிய ஆலோசனை நடத்துவதற்காக திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன்.

அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீதவாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அ.தி.மு.க., தி.மு.க.வை மட்டும் தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகாட்டுகிறது என்பது தவறு. தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பெற்றது தான் உண்மையான வெற்றியாகும். சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. வாக்குச் சாவடி முன்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் என்னிடம் கூட உள்ளது.

ராஜீவ்கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது இதை நிறை வேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டு மல்ல, மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறை வேற்ற போவதில்லை.

தமிழகத்தில் வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்குகளில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்து பரப்பப்பட்டு அவர்களது செல்வாக்கை சரிக்கும் செய்திகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி தெரியாது. அதுகுறித்து கவலைப்படுபவர்களுக்கு தான் பிரச்சினை. நான் கவலைப்படுவது இல்லை என கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top