காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கபாலிடா…… தரையிலும் கபாலி ஆகாயத்திலும் கபாலி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், ம...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் கபாலி திரை படத்திற்கான வரவேற்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகின்ற நிலையில், மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் எயார் ஏசியா விமானத்தில், வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த ‘கபாலி’ விளம்பரம் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
‘கபாலி’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ விளம்பர, விமான நிறுவனமான எயார் ஏசியா நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கபாலி திரைப்படத்தையும் வைத்து தங்கள் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது.

குறிப்பாக “சூப்பர் ஸ்டாரைப் போல் பறந்திடுங்கள்” என்ற வாசகத்துடன் அண்மையில் சலுகை விலை டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்திய எயார் ஏசியா, தங்களது இந்தியா செல்லும் விமானம் ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் படத்தை வரைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.


ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டீசரும், பாடல்களும் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்க, படத்தின் விளம்பரங்களோ புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.


கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க பெங்களூரில் இருந்து தனி விமானம் ஒன்றை எயார் ஏசியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. காலையில் பெங்களூரில் இருந்து புறப்படும் விமானத்தில் சென்னை வந்து முதல் காட்சியை பார்த்துவிட்டு மதியத்துக்குள் மீண்டும் பெங்களூர் திரும்பிவிடலாம்.


இதற்காக வண்ணமயமான கபாலி பட ஸ்டிக்கர்களுடன் விமானம் ஒன்றும் தயாராகியுள்ளது.

இது போன்ற புதிய வகையிலான விளம்பரங்களால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கபாலி திரைப்படம் எதிர்வருமை் ஜூலை 22 ஆம் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top