Mohamed Farook Mohamed Farook Author
Title: முகமது அலி பிரகாசமான மனிதர்: ஒபாமா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சி மிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ...
குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வாழ்க்கை குறித்த உணர்ச்சி மிக்க நினைவஞ்சலி கூட்டம் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லில் நடைபெற்றது.

பல்வேறு மதங்கள் மற்றும் குழுக்களை சேர்ந்த பேச்சாளர்கள், முகமது அலியின் விளையாட்டு குறித்தும், சமூகத்தில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் கூட்டத்தில் திரண்டிருந்த 14 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றினார்கள்.

மனித உரிமைகள் மற்றும் அமைதிக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகள் குறித்தும், யாருக்கும் அவர் அடிபணிந்து இணங்க மறுப்பது குறித்தும், ஏந்த நேரத்திலும் தனது கொள்கைகளின்படி உறுதியாக இருந்ததாகவும் பேச்சாளர்கள் முகமது அலியை புகழ்ந்து பேசினார்கள்.

முகமது அலியின் இத்தகைய குணத்தை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என முகமது அலியின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முகமது அலியை, பெரியவர், பிரகாசமான மனிதர், உண்மையானவர் என்றார்.

மேலும், இந்த சகாப்தத்தில், அவர் வாழ்ந்த காலத்தில் எல்லோரையும் விட யாரும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், மோசமான நோயை அவர் எதிர்கொண்டு போராடிய காலத்தில் அவர் காட்டிய நகைச்சுவை உணர்வும், கண்ணியத்தையும் பில் கிளிண்டன் நினைவு கூர்ந்தார் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top