காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஸ்மார்ட்போனை முறைபடி, திருமணம் செய்த அமெரிக்கர்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள்...
https://1.bp.blogspot.com/-cF9ap9_0hLM/V3QwxOIOJXI/AAAAAAADuUI/57Q5cnJMW00GA22IIM0lW2eZ_TCDlUJpQCLcB/s1600/201606292242448978_Man-Ties-the-Knot-With-His-Smartphone-in-Las-Vegas_SECVPF.gifஅமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக அமெரிக்கர் ஒருவர் தனது ஸ்மார்ட்போனை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 
 
லாஸ் வேகஸ் நகரத்தை சேர்ந்தவர் கலைஞர் மற்றும் இயக்குனரான ஆரோன் சேர்வேனக், சமீபத்தில் லாஸ் வேகஸ் நகரத்தில் தனது ஸ்மார்ட்போனை முறைப்படி திருமணம் செய்து கொண்டார். தேவாலயத்தில் நடந்த திருமண நிகழ்சியில் பாதிரியார் ஒருவர் திருமணத்தை நடத்திவைத்தார். 
 
கிறிஸ்த்துவ வழக்கப்படி பாதிரியார் ஆரோனிடம் “ இந்த ஸ்மார்ட்போனை சட்டப்படி உங்கள் மனைவியாக ஏற்றுகொள்கிறீர்களா? நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நேசிப்பீர்கள் என்றும், மரியாதை அளிப்பீர்கள் என்றும், ஆறுதலாக இருப்பீர்கள் என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்று கேட்டார். இதற்கு ஆரோன் ’ஆமாம்’ என்று பதில் அளித்தார்.
 
பிறகு இந்த திருமணம் பற்றி பேசிய அவர் “ மக்கள் தங்கள் ஸ்மார்ட்போனை அதிகமாக நேசிக்கிறார்கள். காலை கண் விழிப்பதில் ஆரம்பித்து இரவு தூங்க செல்வது வரை ஸ்மார்ட்போன் கூடவே இருக்கிறது. 
 
என் ஸ்மார்ட்போனுடன் எனக்கு நீண்ட நாள் உறவு உள்ளது. நமது போனுடன் உணர்ச்சிகரமான உறவை கொண்டுள்ளோம். நமக்கு ஆறுதலும், அமைதியும் அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளது. இது கிட்டதட்ட ஒரு மனித உறவு போன்றதுதான்” என்று கூறியுள்ளார்.
 
இந்த திருமணம் சட்டப்படி அங்கிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top