vkrnajur vkrnajur Author
Title: குடியரசுத் தலைவர் தேர்தல்: இப்போதே தயாராகும் பாஜக!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
2017, ஜுன் - ஜூலை மாதங்களில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பாஜக இப்போதே தயாராகிவருகிறது. வலத...
2017, ஜுன் - ஜூலை மாதங்களில் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலுக்காக பாஜக இப்போதே தயாராகிவருகிறது. வலதுசாரி சிந்தனை கொண்ட, 'இந்து' தலைவர் ஒருவரை அந்தப் பதவியில் கொண்டுவர வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குறியாக இருக்கிறது.

இதற்கான திட்டமிடல், வாக்குக் கணக்குகள் எல்லாவற்றோடும் பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சாதாரண நேரடி வாக்குமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. விகிதாச்சார பிரதிநிதித்துவமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஒவ்வொரு வாக்கும் ஒற்றை வழிமுறையில் போடப்படுகின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் 776 உறுப்பினர்களும், இந்தியா முழுவதும் 4120 எம்எல்ஏ-க்களும் வாக்களிக்கிறார்கள். இதில், ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால், எம்எல்ஏ-க்களின் வாக்கு மாநிலத்துக்கு மாநிலம் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.

இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்எல்ஏ-க்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடுகிறது. ஒரு எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பைக் கணக்கிட, அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையை, மாநிலத்தில் உள்ள மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.

கிடைக்கிற எண்ணிக்கையை மீண்டும் ஆயிரத்தால் வகுக்க வேண்டும். இதுதான், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள ஒரு தனி எம்எல்ஏ-வின் வாக்கு மதிப்பாகும். இந்த முறைக்கு இதுவரை 1971ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புதான் பயன்படுத்தப்படுகிறது. 2031 மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை 1971 கணக்கெடுப்பையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உதாரணம்:
1971ல் தமிழகத்தின் மக்கள் தொகை - 4,11,99,668
மொத்த உறுப்பினர்கள் - 234
ஒரு எம்எல்ஏ வாக்கு = 4,11,99,668/ (234 x 1000 ) = 176
இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் வாக்கை கணக்கிட இந்த 176-ஐ மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையான 234ஆல் பெருக்க வேண்டும். அப்படிப் பெருக்கினால் கிடைக்கும் தொகை 41184. இதேபோல், இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.

அவையனைத்தும் கூட்டினால் அதன் மதிப்பு 5,94,474 ஆகும். இதை இந்தியாவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையான 776ஆல் வகுக்கும்போது கிடைக்கும் எண்ணிக்கைதான் 708 ஆகும். இந்த சராசரி மதிப்புதான் இந்தியாவில் உள்ள ஒரு எம்.பி-யின் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு மதிப்பாகும்.

இந்தியா முழுவதும் ஒரு சமமான வாக்கு பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க இப்படியான ஒரு முறை கணக்கிடப்படுகிறது. இப்படி சிக்கலான கணக்குகளும், எண்ணிக்கை குழப்பமும் உள்ளதுதான் குடியரசுத் தலைவர் தேர்தல்.

ஆனால், அப்படிப்பட்ட தேர்தலிலும் பாஜக-வினர் ஒரு பயங்கர கணக்கோடு தயாராகிவருகிறார்கள். தற்போது, பாஜக-விடம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 1126 எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள். அதேபோல், மக்களவையில் 282 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் 57 எம்.பி-க்களும் உள்ளனர்.

அதேநேரம், காங்கிரஸிடம் மக்களவையில் 44 எம்.பி-க்களும், மாநிலங்களவையில் 60 எம்.பி-க்களும் உள்ளனர். இந்தியா முழுவதும் காங்கிரஸிடம் உள்ள எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 900ஐ தாண்டாது.

எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்களின் வாக்கு மதிப்புகளை மொத்தமாகக் கூட்டினால் வரும் எண்ணிக்கை 10,98,882. இதில் தற்போதைய நிலவரத்தின்படி, பாஜக-விடம் காங்கிரஸைவிட 22,078 வாக்குகள் அதிகம் உள்ளன.

அடுத்தடுத்து, வரவிருக்கிற பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களில் பாஜக அதிக எம்எல்ஏ-க்களைப் பெறும் என நம்பப்படுகிறது. எனவே, தாங்கள் திட்டமிட்டபடி ஒரு 'இந்து' தலைவரை குடியரசுத் தலைவராக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது.

பாஜக  இதற்கு முன்னால் வாஜ்பாய் தலைமையில் ஆட்சியில் இருந்தபோது இந்த வாய்ப்பு அமையவில்லை. செல்வாக்கு இல்லாததால், பாஜக பொதுவேட்பாளராக அங்கீகரிக்கும்வண்ணம் அப்துல்கலாமை நிறுத்தியது. ஆனால், இம்முறை பாஜக செல்வாக்கோடு உள்ளது.

பாஜக சார்பில் அத்வானியை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற எண்ணம் 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பேசப்படும் ஒன்று. அதேநேரம், பிரணாப் முகர்ஜியுடனும் மோடி நல்ல உறவைப் பேணி வருகிறார்.

எனவே, அத்வானியை மோடி விரும்பாதபட்சத்தில் பிரணாப்-ஐ மீண்டும் குடியரசுத் தலைவராக்கவும்கூடும். சோசலிசவாதி என்றாலும், பிரணாப் முகர்ஜி வங்காள பிராமணர் என்பதால் பாஜக-வின் 'இந்து' அடையாளத்துக்கு எந்தச் சிக்கலும் இருக்காது என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top