vkrnajur vkrnajur Author
Title: பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பணக்காரர்களிடம் இருக்கும் செல்வத்தில் ஏழைகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்று இஸ்லாம் கூறுகிறது. அச்செல்வத்தை அடைக்கலப் பொருளாகப் பணக்காரர்களி...
பணக்காரர்களிடம் இருக்கும் செல்வத்தில் ஏழைகளுக்கும் ஒரு பங்கு உண்டு என்று இஸ்லாம் கூறுகிறது. அச்செல்வத்தை அடைக்கலப் பொருளாகப் பணக்காரர்களிடம் இறைவன் ஒப்படைத்துள்ளான். தம் தேவை போக மீதியுள்ள செல்வத்தைக் கொண்டு, ஏழை மக்களின் குறைகளைப் போக்க வேண்டும்.

இறைவனை நேசித்த பெரியோர்கள் பலர் – பெண்கள் உட்பட தம் பங்குக்குரிய உணவைக்கூட ஏழை எளியவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தாம் பசியுடன் இருந்திருக்கிறார்கள்.

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்பு மகளான பாத்திமாவின் வீட்டில் உணவுப் பொருட்கள் எதுவுமே இருக்கவில்லை. அவருடைய கணவர் கஷ்டப்பட்டு உழைத்து, சிறிதளவு சோளம் கொண்டு வந்தார்.

பாத்திமா அவர்கள் சோளத்தில் ஒரு பகுதியை எடுத்து மாவாக்கி, ரொட்டி தயாரித்து, சாப்பிடுவதற்காக உட்கார்ந்தார்.

அப்பொழுது வாசலில் ஒரு குரல் கேட்டது. “அம்மா! நான் ஓர் ஏழை. மிகவும் பசியாக இருக்கிறேன்”
என்று ஒருவர் யாசித்து நின்றார். உடனே பாத்திமா அவர்கள் ரொட்டியை அந்த ஏழைக்குக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

பிறகு சோளத்தின் இன்னொரு பகுதியை எடுத்து மாவாக்கி ரொட்டி சமைத்தார். அதை உண்ணப்போகும் வேளையில் மீண்டும் வாசலில் ஒரு குரல். “அம்மா! நான் ஓர் அநாதை. மிகவும் பசியோடு இருக்கிறேன்” என்று யாசித்து நின்றார் ஒருவர். இரண்டாவது முறையாகத் தான் தயாரித்த ரொட்டி முழுவதையும் அந்த அநாதைக்குக் கொடுத்துவிட்டார் பாத்திமா.

மீண்டும் மீதியிருந்த சோளத்தை எடுத்து மாவாக்கி ரொட்டி சமைத்தார். அதை உண்பதற்காக உட்கார்ந்தார். மறுபடியும் ஒரு குரல். தான் ஒரு கைதி என்றும், தனக்கு உதவி செய்யுமாறும் ஒருவர் வந்து வேண்டி நின்றார். பாத்திமா அவர்கள் ரொட்டி முழுவதையும் கைதிக்குக் கொடுத்துவிட்டார். அன்று முழுவதும் தாம் பட்டினியாக இருந்தார்.

பாத்திமாவின் இந்த நற்செயல் இறைவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதைக் குறித்து திருமறையில்
ஓர் இறைவசனம் இறங்கியது:

‘இறைவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும்
அநாதைகளுக்கும் சிறைப்பட்டோருக்கும் உணவளித்து வந்தனர்.’ (திருக்குர்ஆன் 76: 8)

எந்தப் பெண்மணியை இறைவனே புகழ்கின்றானோ அவரை விட அதிக நற்பேறு பெற்றவர் யார் இருக்க முடியும்?

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top