Mohamed Farook Mohamed Farook Author
Title: முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மத நல்லிணக்கத்துக்கு மீண்டும் ஒரு எடுத்துகாட்டு…!!! முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்! முசாபர்  தலைந...
மத நல்லிணக்கத்துக்கு மீண்டும் ஒரு எடுத்துகாட்டு…!!! முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து ரமலான் நோன்பு இருக்கும் இந்துக் கைதிகள்!
முசாபர்  தலைநகர் உத்திரபிரதேசத்தில் உள்ள இஸ்லாமிய கைதிகளுடன, சேர்ந்து 65 இந்து சகோதரர்களும், புனித ரமலான் மாதத்தின் நோன்பை நேற்று முதல் கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

ஜெயில் சூப்பிரண்ட் கூறுகையில் இஸ்லாமியர்களின் நோன்பு காலம் என்பதால் அவர்கள் தொழுவதுக்கும். சிறப்பான ஏற்பாடுகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் நோன்பு திறக்கும் போது பழங்கள், பால், மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவை ஜெயில் சார்பாக அவர்களுக்கு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்துவேறு 

இந்துத்துவா வேறு என்பதை இங்கே நாம் காண முடிகிறது.

ஒற்றுமையை பலப்படுத்துவோம்

காவியின் மூஞ்சில் கரியை பூசுவோம்

முசாபர்நகர்: உத்திரப்பிரதேசத்தில் முஸ்லீம் கைதிகளுடன் இணைந்து இந்துக் கைதிகளும் ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தக் கூடிய வகையிலான இந்த செயல் பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள மாவட்ட சிறையில் 1150 முஸ்லீம் கைதிகள் உள்ளனர். இவர்கள் தற்போது ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து அங்குள்ள 65 இந்துக் கைதிகளும் தினசரி நோன்பைக் கடைப்பிடித்து வருகின்றனர். 

ரமலான் நோன்பின் முதல் நாளான நேற்று முஸ்லீம் கைதிகளுடன் இந்துக் கைதிகளும் நோன்பு கடைப்பிடித்ததாக ஜெயிலர் சதீஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். கைதிகள் நோன்புக் காலத்தின்போது தொழுகை நடத்த வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தக் குறையம் இல்லாத வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்தாகவும் அவர் கூறியுள்ளார். 

நோன்பு காலத்தில் உலர் பழங்கள், பேரீச்சம்பழம், அரை லிட்டர் பால், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவையும் கைதிகளுக்கு தரப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top