காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சுவாதி தந்தையின் வேண்டுகோள் தனது மனதை உலுக்கிவிட்டதாக மு.க.ஸ்டாலின் பேட்டி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை 6.30 மணியளவில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி என்ற இளம்பெண், வாலிபர் ஒருவரா...
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை 6.30 மணியளவில் இன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி என்ற இளம்பெண், வாலிபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.

கொலை செய்த நபரை போலீசார் தீவிரவமாக தேடி வருகின்றனர். இதனையடுத்து திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்  சுவாதியின் தந்தையின் வேண்டுகோள் எனது மனதை உலுக்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

சூளைமேட்டிலுள்ள சுவாதியின் வீட்டுக்கு சென்ற ஸ்டாலின் சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என சட்டசபையில் முதலமைச்சர் கூறியது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து விட்டன. ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் தமிழகத்தில் கொலைகள் அதிகரித்து வருகின்றன என சட்டம்-ஒழுங்கு  பிரச்சனை குறித்து மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுவாதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சுவாதியின் தந்தை, சந்தான கோபாலகிருஷ்ணன் தன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்ததாகவும், அது தனது மனதை உலுக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், இனிமேல் யாருக்கும் இப்படி நடக்க கூடாது என்று தன்னிடம் வலியுறுத்தியதாகவும் கூறிய அவரது பெருந்தன்மை தனது மனதை உலுக்கி விட்டதாக ஸ்டாலின் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top