Mohamed Farook Mohamed Farook Author
Title: கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு அருகதை கிடையாது: சட்டசபையில் சீறிய ஜெயலலிதா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சட்டசபை கூடியபோது, ஆளுநர் உரைக்கு நன்றி ...
இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்றபோது, அதிமுக-திமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டசபை கூடியபோது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் அதிமுக உறுப்பினர் செம்மலை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், முரண்பாட்டின் மொத்த உருவம் கருணாநிதி தான் என்று விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள், கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடக் கூடாது எனக் கூறினர்.
அப்போது பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செம்மலையின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், செம்மலை பேசியது போன்று திமுக உறுப்பினர்களுக்கும் பேச அனுமதி கிடைக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற வாக்குவாதம் நடைபெற்றதால், அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
கச்சத்தீவு
கச்சத்தீவு குறித்து பேச திமுகவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது, திமுக ஆட்சியில் இருந்த போது தான் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது, இதனை மறுத்து எதிர்கட்சிகள் எவ்வளவு கூச்சல் போட்டாலும், இது உண்மை தான்.

கச்சத்தீவை மீட்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை, மீனவர்கள் படும் துயரங்களுக்கு எல்லாம் திமுக தான் காரணம், என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், கச்சத்தீவை மீட்க வேண்டும் என கடந்த 1974ம் ஆண்டு பிரதமர் இந்திராவுக்கு முதல்வராக கருணாநிதி கடிதம் எழுதினார்.
அமைச்சரவையை கூட்டியும் கோரிக்கை விடுத்தோம். கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசின் முடிவை மாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top