Mohammed Farook Mohammed Farook Author
Title: சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி! வைரலாகும் புகைப்படங்கள்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அர்ஜென்டினாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக...
அர்ஜென்டினாவில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அர்ஜென்டினா தலைநகர் ப்யூனஸ் அயர்சைச் சேர்ந்தவர் கன்னியாஸ்திரி சிசிலியா மரியா (வயது 43).
அனைவரிடமும் அன்பாகவும் கனிவாகவும் நடந்துக் கொள்ளும் கன்னியாஸ்திரி சிசிலியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் தன்னுடைய நோய் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் தொடர்ந்து இறை ஊழியத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிலியா மரணமடைந்தார்.
அவர் இறக்கும் தருவாயில் கூட 'அனைவரும் அன்பை பகிர்ந்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியவாறே சிரித்தபடியே மரணமடைந்தார். அவரது உதடுகள் பல மணிநேரம் சிரித்தபடியே இருந்தது.
கடைசி நேரத்தில் கூட சிரித்தபடியே மரணித்த சிசிலியாவின் புன்னகை புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top