Mohamed Farook Mohamed Farook Author
Title: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் ஆபத்தா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவ...
மனித உடலில் தண்ணீர் என்பது ஜீரணம், வியர்வை வெளியேற்றம், உடலுக்குள் சத்துணவை எடுத்துச் செல்வது, திரவ மற்றும் திடக் கழிவுகளை வெளியேற்றுவதற்கு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதற்கு போன்ற பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்வதற்கு அவசியமாகிறது.
ஒரு நாளைக்கு ஆண்கள் 3 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும்.
உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும்.
உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது நிறைந்திருந்தாலும் மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.
நீர் சிகிச்சை (Water Therapy)
காலையில் எழுந்தவுடன் 1.5 லிட்டர் அல்லது 5-6 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். அதன் பின்னர் பல் மற்றும் முகங்களை கழுவ வேண்டும்.
இந்த நீர் சிகிச்சையின் முக்கிய அம்சம் என்னவென்றால், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னும், குடித்த 1 மணி நேரத்துக்கு பின்பும், எதுவும் சாப்பிடக்கூடாது.
மேலும் இந்த நீர் சிகிச்சையைக் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய இரவிலிருந்து மது அருந்தாமல் இருக்கவேண்டும்.
முதலில் ஆரம்பிக்கும்போது 1 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிக கடினமாக இருக்கும். ஆனால், போகப் போக பழகிவிடும்.
நீர் சிகிச்சையின் நன்மைகள்
  • நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
  • உடலுக்கு ஆரோக்கியத்தையும், தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கிறது.
  • உடல் சூட்டை தணிக்கிறது.
  • மலச்சிக்கலை சரிசெய்கிறது.
  • அசிடிட்டியை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள ரத்தம் தூய்மையடைகிறது.
  • தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
  • உடலின் வடிவமைப்பை ஒழுங்கான நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
அனிமியா(Anemia), உடற்பருமன்(obesity), ஆர்த்ரிடிஸ்(Arthritis) டைகார்டியா(tachycardia), இருமல்(cough), லுகேமியா(leukemia), கண் நோய்கள்(eye-disease), ஒழுங்கற்ற மாதவிடாய்(irregularmenstruation), தலைவலி(headache) போன்றவற்றை நீர் சிகிச்சை கட்டுப்படுத்துகிறது.
தீமைகள்
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நீர் சிகிச்சைக்கும் பொருந்தும்.
அளவுக்கதிகமான தண்ணீரை அருந்தும் போது அது உடலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன, ஏனெனில் நம் உடம்பானது குறைந்த திறன் தண்ணீரையே உடம்பில் இருந்து வெளியேற்றுகிறது.
இந்த அளவு கடந்துவிட்டால், அந்த தண்ணீரே விஷமாகவும், அல்லது உயர் நீரேற்றத்தினையும் ஏற்படுத்தி விடுகின்றன.
இதனால் மூளை பாதிப்பு மற்றும் இதயம் செயலிழப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
எனவே நீர் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்னர் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top