vkrnajur vkrnajur Author
Title: உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்கள்..!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
மும்பை: சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார துறையை குறித்து அவ்வபோது ஆய்வுகளை செய்து வரும் போர்ப்ஸ், 2016ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 25 சக்தி...
மும்பை: சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார துறையை குறித்து அவ்வபோது ஆய்வுகளை செய்து வரும் போர்ப்ஸ், 2016ஆம் ஆண்டுக்கான உலகின் டாப் 25 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் வழக்கம்போல் அமெரிக்க பெண்கள் ஆதிக்கம் சிறப்பாக இருந்தாலும், பல போட்டிகளை தாண்டி டாப் 100 பெண்கள் பட்டியிலில் 4 இந்திய பெண்மணிகள் இடம்பெற்றுள்ளனர்.

அருந்ததி பட்டாச்சார்யா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்திய வங்கியின் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 25வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
சந்தா கோச்சார்
அருந்ததி பட்டாச்சார்யா தொடர்ந்து நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் இப்பட்டியலில் 40வது இடத்தை பிடித்துள்ளார்.
3/17
கிரன் முசம்தார் ஷா
பயோபார்மா மருந்து ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் பயோகான் நிறுவனத்தின் தலைவரான கிரன் முசம்தார் ஷா பேர்ப்ஸ் வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 77வது இடத்தை பிடித்துள்ளாது
ஹிந்தூஸ்தான் டைம்ஸ்
மீடியா முதல் எப்எம் ரேடியோ ஸ்டேஷன் வரை, ஆன்லைன் ஜாப் போர்ட்ல் முதல் கல்வி துறை வரை பல துறைகளில் இருக்கும் ஹிந்தூஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷோபனா பாத்திய இப்பட்டியலில் 93வது இடத்தை பிடித்துள்ளார்
இந்திரா நூயி
அதேபோல் இந்திய- அமெரிக்கா பெண்மணியான பெப்சி கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி இப்படியலில் 15வது இடத்தை பிடித்தார்
100 பெண்கள்
போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் வர்த்தக துறையை சார்ந்தசவர்கள் மட்டும் அல்லாமல் பில்லியனர்கள், மீடியா, அரசியல், சமுகசேவகர்கள், என்ஜீஓ மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top