Mohamed Farook Mohamed Farook Author
Title: கடலில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்பு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
லிபியாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இத்தா...
லிபியாவையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த 2,000 அகதிகள் மீட்கப்பட்டதாக இத்தாலி கடலோரக் காவல் படையினர் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் இது தொடர்பாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்ததாவது:
மத்தியதரைக் கடலில் பாதுகாப்பற்ற படகுகளில் பயணம் செய்து நடுக்கடலில் தத்தளித்த சுமார் 2,000 அகதிகள் மீட்கப்பட்டனர்.

லிபியாவையொட்டிய கடல் பகுதியில் புதன்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் அவர்கள் மீட்கப்பட்டனர். இத்தாலி கடற்படைக் கப்பல்கள், ஐரோப்பிய யூனியனின் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மீட்கப்பட்ட அகதிகளுக்கு இத்தாலியில் தாற்காலிகமாக அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஐ.நா. அகதிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இராக், சிரியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. அகதிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்து 48,000 அகதிகள் இத்தாலியில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடிவிட்டதால், புகலிடம் தேடும் அகதிகள் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டு இத்தாலியை அடைகின்றனர். பெரும் எண்ணிக்கையில் அகதிகள் வருவதையடுத்து, இத்தாலியில் உள்ள அகதிகள் முகாம் நிரம்பி வழிகின்றன. இதனால் அடிப்படை வசதிகள் போதாமல், அகதிகள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top