Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் (VKR ISLAMIC TRUST) அறக்கட்டளையின் சார்பாக பொருட்கள் வினியோகம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்).. வி.களத்தூரில் (VKR ISLAMIC TRUST) அறக்கட்டளையின் சார்பாக பொருள் வினியோகம் நமதூரில் புனித ரமலான் மாதம் நெர...
அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)..

வி.களத்தூரில் (VKR ISLAMIC TRUST) அறக்கட்டளையின் சார்பாக பொருள் வினியோகம்

நமதூரில் புனித ரமலான் மாதம் நெருங்கி வருகிறது. அதனை கருத்தில் கொண்டு (VKR ISLAMIC TRUST) அறக்கட்டளை சார்பாக நமதூரில் ஏழ்மை குடும்பங்களுக்கு அவர்கள் புனித நோன்பு வைக்க நோன்பு திறக்க அரிசி, சார்பத் தூள், போன்ற பொருட்கள் நேற்று (VKR ISLAMIC TRUST) அறக்கட்டளையின் நபர்களால் வினியோகம் செய்யப்பட்டது.
  வி.களத்தூரில் நீங்களும் சேவை செய்ய வேண்டுகிறோம்..

 அறக்கட்டளையின் சேவைகள்

1. ஏழைகளுக்கு உதவி திட்டம்
2. கடன் உதவி திட்டம்
3. பொது சேவை திட்டம்
4. கல்வி உதவி திட்டம்
5. சிறு சேமிப்புத்திட்டம்

இன்ஷா அல்லாஹ் இது போன்ற பல நல்ல திட்டங்களை அறிமுக செய்ய உள்ளோம்.

மேற்கண்டத்திட்டத்தில் அனைவர்களும் பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்....இத்திட்டத்தில் இனைந்து நன்மையை அல்லி கொள்ளுங்கள்.

இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால், விரைவில் நமதூர் மக்களை  (VKR ISLAMIC TRUST) யில் இனைக்க  நாடியுள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

”ஆதவுமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும் அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும்.

தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்ட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஉமாமர் (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:510)


இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும்.

வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரிஙங்களிலும் நன்மையை தந்து ஹாலல், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லாருள் புரியட்டும்.


இன்ஷா அல்லாஹ் நன்மைக்காக இணைவீர்...
மேலும் தகவலுக்கு ..
S. சம்சுதீன் - மில்லத் நகர் (7845123129,)
M. நாஜுர்தீன் வி.களத்தூர் (8807390854)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top