Mohammed Farook Mohammed Farook Author
Title: EXPRESS NEWS>> தபால் ஓட்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியது திமுக: திமுக 36, அதிமுக 25 முன்னிலை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டு...
கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற, தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவர்கள் மற்றும் காவலர்கள் அளித்த தபால் ஓட்டுகளை எண்ணும் பணி தற்போது  தொடங்கியுள்ளது.
 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது.  முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்படுகிறது. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. 
 
தமிழகத்தில் மே 7ஆம் தேதி தபால் ஓட்டு தொடங்கி மே 14 ஆம் தேதி வரை செலுத்தப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தபால் ஓட்டுகள் செலுத்தியுள்ளனர். அதிக பட்சமாக 4 லட்சம் பேர் தபால் ஓட்டு அளித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சரியாக இன்று காலை எட்டு மணிக்கு தபால் ஒட்டுகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதில் திமுக 36 தொகுதிகளிலும், திமுக 25 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் பொன்முடி 4000 வக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top