Mohammed Farook Mohammed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> உளுந்தூர் போட்டையில் விஜயகாந்த் படுதோல்வி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உளுந்தூர் போட்டையில் விஜயகாந்த் படுதோல்வி    தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவுர் தவிர்த்...
உளுந்தூர் போட்டையில் விஜயகாந்த் படுதோல்வி 
 
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. அரவங்குறிச்சி, தஞ்சாவுர் தவிர்த்து மொத்தம் 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
விஜயகாந்த், இந்த முறை மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அதிமுக, திமுகவிற்கு மாற்று வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று மநகூ தலைவர்கள் கூறி வந்தனர்.
 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. தொடக்கம் முதலே குறைவான வாக்குகளைப் பெற்று, விஜயகாந்த் மூன்றாம் இடத்திலேயே இருந்தார்.
 
தற்போது, அவர் 47,529 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தொகுதியில் போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் ஆர்.குமரகுரு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், விஜயகாந்தும், குமரகுருவும் எவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top