Mohammed Farook Mohammed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி:
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக அமோகமாக முன்னிலை பெற்று வ...
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே அதிமுக அமோகமாக முன்னிலை பெற்று வருகிறது. இதனால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நன்றி கூறியுள்ளார், வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என கூறிய ஜெயலலிதா. மக்கள் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என கூறினார்.
 
மேலும், தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற உழைப்பேன், திமுகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் பொடி பொடியாக்கிவிட்டனர். தமிழக மக்களுக்கு என்றும் கடமைப்பட்டவளாக இருப்பேன் என கூறிய ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு நன்றி கூற வார்த்தைகளே இல்லை என குறிப்பிட்டார்.
 
முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top