Mohamed Farook Mohamed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> வங்காளத்தின் செல்லப்பிள்ளை : மீண்டும் மம்தா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வர...
மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் 6 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 216 தொகுதிகளிலும், இடது சாரிகள் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், பாஜக 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

திரிணாமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இது குறித்து மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறுகையில், எங்களை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி.

வரும் 27ம் தேதி நான் மீண்டும் முதல்வராக பதவியேற்பேன். பல பிரச்சனைகளுக்கு இடையே தேர்தலை அமைதியாக நடத்திக் கொடுத்த தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதால் தான் பொய் பிரச்சாரங்கள் எடுபடவில்லை. வெற்றிக் கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் 11 நாட்கள் நடைபெறும் என்றார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top