Mohamed Farook Mohamed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> தேர்தல் முடிவு குறித்து அன்புமணியின் குமுறல்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. அதற்க...
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. அதற்கு அடுத்த இடமாக சற்று பிந்தங்கி திமுக இருக்கிறது.
 
இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு நாங்கள் ஆட்சியை பிடிப்போம். அன்புமணி ராமதாஸ் முதல்வராக பதவி ஏற்பார் என கூறிவந்த பாமக 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளன. இதில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் பின்னடைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பின்னடைவு குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், மக்கள் ஊழலுக்கும் மோசமான நிர்வாகத்திற்கும் ஆதரவாக வக்களித்திருப்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
 
மேலும், நாங்கள் இலவசத்தை நம்பவில்லை. இலவசங்களை அறிவிக்கவில்லை! மாநில தொழில் வளர்ச்சிக்கும், மக்கள் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அறிவித்து எங்கள் பிரசாரத்தை முன்னெடுத்து சென்றோம். இளைஞர் நலனுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்தோம்.
 
ஐம்பது வருடங்கள் பின் தங்கியிருந்த தமிழ்நாட்டை ஐந்து வருடங்களில் முன்னுக்கு கொண்டு வரும் யதார்த்தமான சாத்தியம் உள்ள திட்டங்களை முன்நிறுத்தி இருந்தோம். ஆனால், மக்கள் தந்த இந்த தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்றார் அன்புமணி ராமதாஸ்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top