Mohamed Farook Mohamed Farook Author
Title: ELECTION EXPRESS NEWS>> 23-ஆம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வரும் 23-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வரா...
தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வரும் 23-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 
ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த அதிமுக திமுகவை விட அதிக இடங்களில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதன் மூலம் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
 
இதனையடுத்து பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறியுள்ளனர். மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை கூறியுள்ளார்.
 
இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதிமுக தரப்பில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவு முழுமையாக வெளியான பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top