Mohamed Farook Mohamed Farook Author
Title: இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக ஏ.ஆர். ரகுமான் நியமனம்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார். இ...
ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொது செயலாளர் ராஜீவ் மேத்தா, நல்லெண்ண தூதராக செயலாற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒப்புக் கொண்டதை வரவேற்பதாகவும், ஒலிம்பிக் அமைப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒலிம்பிக் விளையாட்டுக்களை பிரபலப்படுத்தவும் அவர் உதவுவார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, நல்லெண்ண தூதராக செயல்பட ஒப்புக் கொண்ட ஏ.ஆர். ரஹ்மான், தனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமிருந்து எந்த முறையான அழைப்பும் வரவில்லை என ரஹ்மான் பேட்டியளித்திருந்தார்.

இதனையடுத்து அவரைத் தொடர்பு கொண்ட, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள், ஒலிம்பிக் நல்லெண்ண தூதராக செயல்பட கேட்டுக் கொண்டனர். இதற்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான், ஒலிம்பிக் தங்க பதக்க வீரர் அபினவ் பிந்த்ரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும், இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top