Mohammed Farook Mohammed Farook Author
Title: தலித்துக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற எம்.பி. தருண் விஜய் தாக்கப்பட்டார்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உத்தரகண்ட் மாநிலம் சக்ரதா பகுதியில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. தருண் விஜய் தாக்கப...
உத்தரகண்ட் மாநிலம் சக்ரதா பகுதியில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. தருண் விஜய் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனா கிராமத்தில் சில்குர் தேவதா என்ற கோவில் உள்ளது. அங்கு பல வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
 
இதை எதிர்த்த உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.தருண் விஜய், அந்த கோவிலிக்குள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்கினார்.
 
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அவர் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த பலரை அழைத்துக் கொண்டு சில்குர் தேவதா கோவிலுக்குள் சென்று தருண் விஜய் வழிபட்டார்.
 
அப்போது ஒரு கும்பல், தருண் விஜய் மற்றும அவருடன் வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். தருண் விஜயின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அவரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
 
உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top