Mohamed Farook Mohamed Farook Author
Title: வி.களத்தூரில் சிறப்பாக நடைப்பெற்ற ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா! - போட்டோ ஆல்பம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்த...
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா தற்போது தொடங்கியது.

அந்த வரிசையில் வி.களத்தூரில் நேற்று மாலை 3 மணியிளவில் மதராஸா ஹிதாயத்துல் இஸ்லாம் ஆண்டுவிழா காயிதே மில்லத் திடலில் சிறப்பாக தொடங்கியது.


மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி வரை நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக மதரஸா மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம் நிகழ்வு தொடங்கியது.  தலைப்பு - நம்முடைய சமுதாய வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா? பெண்களா? 
நடுவர் - மெளலானா மெளலவி M. ஷபியுல்லாஹ் அவர்கள் தலைமை தங்கினார். இருபக்கமும் மாணவ, மாணவிகள் தங்கள் வாதத்தை வைத்து உரையாற்றினார்.
அதன் பிறகு சிறப்பு சொற்பொழிவு மெளலானா மெளலவி M. ஷபியுல்லாஹ் அவர்கள் இல்லறம் பற்றி மிக தெளிவாக ஆற்றினார். அவர் தனது உரைகளை முடிப்பதற்கு முன் நம்முடைய சமுதாய வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்கள் தான் என தீர்ப்பு அளித்தார்.

இறுதியாக துஆவுடன் விழா இரவு 10. 25 மணியளவில் நிறைவுற்றது.
அதன் பின் இஷா தொழுகை நடைப்பெற்றது.

நமது ஊரில் வருடம் வருடம் சிறப்பாக நடைப்பெற்று வரும் மதரஸா ஆண்டு விழா இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமதூர் இஸலாமிய மக்கள் இதில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
 
   
 
         

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top