Mohammed Farook Mohammed Farook Author
Title: சவுதியில் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செய்ய ரத்து - ஈரான் அறிவிப்பு
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஈரானின் முக்கிய ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் என்பவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை அளித்ததால் ஜனவரி 2 முதற்கொண்டு இவ்விரு நாடுகளு...
ஈரானின் முக்கிய ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் என்பவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை அளித்ததால் ஜனவரி 2 முதற்கொண்டு இவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதற்ற நிலை தோன்றியுள்ளது. 

உச்சக் கட்டமாக இவ்வருடம் சவுதி அரேபியாவுக்கான ஈரான் முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் சவுதி ஹஜ் யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 2426 பேர் பலியாகி இருந்தனர். இதில் 464 பேர் ஈரானியர்கள் என்றும் இவர்களது மரணத்துக்கு உரிய பரிகாரம் இன்னமும் முறையாக கையாளப் படவில்லை என்றும் கூட ஈரான் தெரிவித்திருந்தது. 

இத்தகைய அழுத்தங்களைத் தொடர்ந்து இவ்வருடம் ஈரான் ஹஜ் யாத்திரையைப் புறக்கணிப்பதாக வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே யேமென் உள்நாட்டுப் போர் விவகாரத்துல் ஷைட்டி முஸ்லிம் நாடான ஈரானும் சுன்னி முஸ்லிம் இராச்சியமான சவுதியும் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ள போதும் இதுவரை முன்னேற்றகரமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை.

ஆயுதம் தாங்கியிராத ஈரான் ஷைட்டி மதகுருவான நிம்ர் அல் நிம்ர் மிக ஆபத்தான தீவிரவாதி என முத்திரை குத்தப் பட்டு சவுதி அரேபியாவால் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மேலும் இந்த கொலை ஈரானில் கடும் எதிர்ப்பை சம்பாதித்ததுடன் சவுதி அரசுக்கு எதிராகப் பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கும் வழி வகுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகம் முழுதும் ஷைட்டி இன முஸ்லிம்களுக்கு ஒரு மிகச் சிறந்த பாதுகாவலராக செயற்பட்டவர் அல் நிம்ர் என்றும் ஈரானிய மக்கள் நம்புகின்றனர்.

ஈரான் மற்றும் சவுதி இடையேயான இந்த முரண்பாடு இவ்விரு நாடுகளுக்கும் இடையே  இருந்த இராஜ தந்திர உறவைத் தடை செய்துள்ளதாக உத்தியோகபூர்வ செய்திகள் கூறுகின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

  1. உங்கள் செய்திகள் சில ஷியாக்களுக்கு சார்பானதாக இருக்கிறது. ஷியாக்களை முஸ்லிம்கள் என கருதமுடியாத நிலையில் உங்கள் வலைத்தளம் அவர்களை முஸ்லிம் என்று குறிப்பிடுவதை தவிர்த்து "ஷியா" என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்

    பதிலளிநீக்கு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top