Mohamed Farook Mohamed Farook Author
Title: மக்கள் நம்பாத மக்கள் நலக் கூட்டணி?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மக்கள் நலக் கூட்டணியாக களத்தில் நின்றும், மக்கள் நம்பாத கூட்டணியாக மாறியது ஏன் என்ற விமர்சனம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. ...
மக்கள் நலக் கூட்டணியாக களத்தில் நின்றும், மக்கள் நம்பாத கூட்டணியாக மாறியது ஏன் என்ற விமர்சனம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 50 ஆண்டாக மாறி மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று அணி என்ற பெயரில் தேர்தல் களத்தில் நின்ற மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் தோல்வி, அக் கூட்டணியினரை பெரும் அதிரிச்சி அடைய வைத்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே மாற்று கொள்கைகள் கொண்ட கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய 4 கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியாக ஒருங்கிணைந்தனர். இவர்கள் குறைந்த பட்ச செயல்திட்டத்தை வெளியிட்டு, பல போராட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று 4 கட்சித் தலைவர்களும் செயலாற்றி வந்தனர். கல்லூரி தோழர்கள் போன்று நடைபயனம், உணவு அருந்துதல், பேட்டிகள் போன்ற செயல்களில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வந்தனர். இதுகுறித்து அக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில்தான், பாஜக, திமுகவுடன் கடைசி வரை முயற்சி செய்துவிட்டு, கடைசியாக மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இதுபோன்று அதிமுகவுடன் கூட்டணிக்கான முயற்சிகள் தோல்வியை தழுவ, கடைசியாக ஜி.கே.வாசனும் கூட்டணியில் இணைய, 6 கட்சி கூட்டணியாக விரிவடைந்தது. பிறகு, எங்கள் பாண்டவர் அணி, நாங்கள் ஆறுமுகம், இனி ஏறுமுகம் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முத்தாரசன், விஜயகாந்த் குறிப்பிட ஆரம்பித்தார்கள். தொடர்ந்து மாநாடுகள், பிரசாரம் என்று கூட்டணியினர் கடுமையாக களத்தில் போராடினர். ஆனால், தேர்தல் முடிவு பலத்த தோல்வியை தந்தது. இந்த தோல்வி கூட்டணி தலைவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்படுத்தியுள்ளது.
மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேர்தலில் நின்றவர்களில் காட்டுமன்னார்கோவில் தனி தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்திற்கு வர முடிந்தது. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டையில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அரசியல் அரங்கில் ஆச்சரியத்தை ஏற்படித்தியுள்ளது.
பல தொகுதிகளில் இந்த அணியினர் பெடபாசிட் பணத்தை இழந்ததும், மிகக் குறைவான வாக்குகளைப் பெற்றதும், 6 கட்சிகளும் இணைந்து வெறும் 5 சதவீதம் அளவுக்கே வாக்குகளைப் பெற்றதும், கூட்டணியினரை மேலும் அதிர வைத்துள்ளது.
மக்கள் நலக் கூட்டணியாக களத்தில் நின்றும், மக்கள் நம்பாத கூட்டணியாக மாறியது ஏன் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
அதாவது, தமிழகத்தை இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து ஆட்சி செய்து நாசமாக்கி விட்டார்கள் என்ற இந்த அணியினரின் கோஷம் இவர்களுக்கு எதிராகவே மாறியது.
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து பல பதவி சுகங்களை அனுபவித்த கட்சியினர், திடீரென அவர்களை கடுமையாக விமர்சனம் செய்ததை சந்தர்ப்பவதாமாக மக்கள் பார்த்தனர்.
திமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசிய விஜயகாந்த், அதிமுகவின் கூட்டணிக்காக காத்திருந்த ஜி.கே.வாசன் ஆகியோர், கடைசி நேரத்தில் இக் கூட்டணியில் இணைந்து அவர்களுக்கு எதிராகப் பேசியது, பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகிவிட்டது.
மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் இடதுசாரிகளின் தொண்டர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். இதேபோல் மற்ற கட்சி தொண்டர்களும், நடுநிலை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் தொகுதி ஒதுக்கீடு செய்ததிலும், மதிமுக, தேமுதிக குறித்து அதிருப்தியும் தொண்டர்கள் மத்தியில் தொடர்ந்தது.
பிரசார களத்தில் விஜயகாந்தின் செயல்பாடுகள், அவரது மனைவி பிரேமலதாவின் கடுமையான விமர்சனங்கள், வைகோவின் நம்பகத்தன்மையற்ற பேச்சுகள், குற்றச்சாட்டுகள் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது.
மேலும் சமூக ஊடகங்களான முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல்களில் இவர்களது பிரசாரத்துக்கு கடும் கிண்டலும், கேலியுடம் செய்து பதிவுகள் வெளியிடப்பட்டது.
மேலும், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தேர்தலில் போட்டியிலிருந்து திடீரென்று விலகியதும், அவரின் முரண்பட்ட பேட்டிகள், செயல்பாடுகள் கூட்டணி தொண்டர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கூட்டணிக்கு தோல்வி கிடைத்தால், தேர்தலுக்குப் பிறகு வேறு வேறு அணிகளுக்கு ஓடி விடுவார்கள் என்ற அளவுக்கு வைகோ பேசியது, கூட்டணியினரிடமும், இளம் வாக்காளர்களிடமும் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
நீண்ட காலத்திற்குப் பின் மூன்றாவது அணியாக  உருவான கூட்டணியை, அக் கூட்டணியின் தலைவர்களின் பேச்சுகளும் செயல்பாடுகளும் பொதுமக்களிடம் நம்பகத்தன்மை இன்மையை ஏற்படுத்தியதே, அணியின் பெரும் தோல்விக்கு காரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
விசிக, சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளை விட, நோட்டாவிற்கு 5,41,390 (1.3 சதவீதம்) பேர் வாக்களித்துள்ளனர் என்பதை சிந்தித்து இனிவரும் காலங்களில் எழுச்சியுடன் மக்கள் நலக் கூட்டணி தொடருமா… பொருத்திருந்து பார்ப்போம்..!

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top