Mohamed Farook Mohamed Farook Author
Title: பூமிக்கடியில் ஒரு நகரம்… மாணிக்க கற்கள் நிறைந்த கூபர் பெடி!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் ‘கூபர் பெடி’ வடதெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டிலிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. உல...
மாணிக்கக் கல்லின் தலைநகரம் என அழைக்கப்படும் ‘கூபர் பெடி’ வடதெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்டிலிருந்து 846 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. உலகின் மிகச்சிறந்த மாணிக்கக் கற்களை இங்குதான் தோண்டி எடுக்கின்றனர்.

கூபர்பெடி பூமிக்கு கீழே அமைந்துள்ள ஒரு நகரம். இந்தப் பகுதியே ஒரு பாலைவனம் தான். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி கடலால் சூழப்பட்டிருந்ததாம். பல நீண்ட குகைகள், மேடுகள், பள்ளங்களைக் கொண்ட பகுதி இது. இந்த பாலைவனப் பகுதியில் தோண்டத் தோண்ட மாணிக்கக் கற்கள்தான்.

1915இல் இந்த நகரம் உருவாக்கப்பட்டது. 2011-ஆம் ஆண்டின் கணக்குப்படி இதன் ஜனத்தொகை 1695. இதில் அபார்ஜியன்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் பழங்குடியினர் 275 பேர். இவர்கள் இந்த நகரத்திற்கு வைத்துள்ள பெயர் வெள்ளை மனிதர்களின் துவாரம். இதன் வடிவம்தான் கூபர்பெடி.

குகை போன்ற பகுதியில், ஒரு நகரமே அமைந்துள்ளதால், எப்போதும் இந்த இடத்தை சுற்றிப் பார்க்க உல்லாச பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மாணிக்கக்கல் காட்சியகம், சர்ச்சுகள், வீடுகள், கடைகள், மாணிக்க வயல்கள் என எல்லாம் இங்கு உண்டு. பாலைவனத்தில் இந்தப்பகுதி அமைந்துள்ளதால் பாலைவன நாய்கள் இங்கு அதிகம். அவை ஆக்ரோஷமானவை. எனவே, நாய் தடுப்பு வேலி ஒன்றை அமைத்திருக்கிறார்கள். க்வீன்ஸ்லாந்திலிருந்து கிரேட் ஆஸ்திரேலியாவின் இன்னொரு பகுதிக்கு இந்த வேலி செல்கிறது.

இதன் நீளம் 5,300 கி.மீ. எதற்காக இந்த வேலி? இந்தப் பகுதியில் பலநூறு கி.மீ.தூரத்திற்கு செம்மறி ஆட்டுப் பண்ணைகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கவே இந்த வேலி! இந்த பூமியில் எண்ணெய் வளம் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆக இங்கு வருங்காலத்தில் நிலைமை மாறலாம். இந்த இடம் நெடுஞ்சாலையில் உள்ளதால் இருபுறமும் செல்பவர்கள், இங்கு சில மணிநேரம் செலவழித்துவிட்டுதான் பயணம் மேற்கொள்கின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top