Mohamed Farook Mohamed Farook Author
Title: மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் ஆண்டு மற்றும் ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது! முழு விபரங்களுடன் போட்டோ ஆல்பம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்...
ஒவ்வொரு வருடமும் வி.களத்தூரில் உள்ள மதரஸா ஆண்டுவிழாக்கள் நடைபெறும். இந்தவருடம் ரமலான் நெருங்க ஆரம்பித்து விட்டது ஆகையால் வி.களத்தூரில் உள்ள மதரஸாக்களில் ஆண்டுவிழா நடைப்பெற்று வருகிறது.

அந்த வரிசையில் நேற்று (28.05.16) மாலை 3 மணியிளவில் மில்லத்நகர் மதராஸா நூருல் இஸ்லாம் 22ஆம் ஆண்டு நிறைவு மற்றும் ஐம்பெரும் விழா ஈத்கா திடலில் சிறப்பாக தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் ஊர்வலம் ஈத்கா திடலில் இருந்து சரியாக 3 மணியளவில் மதரஸா மாணவ, மாணவிகளின் ஊர்வலம் புறப்பட்டு அனைத்து வீதிகளுக்கு சென்று மீண்டும் ஈத்கா திடலில் நிறைவுற்றது.  

ஊர்வலம் புகைப்படங்கள் பார்க்க - 

அதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் சிறப்பு பேச்சு, உரையாடல், கேள்வி பதில் போன்ற நிகழ்ச்சிகள் மேலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் என இரவு 8.00 மணி வரை நடைப்பெற்றது.

புதிய மெளலவிகளுக்கும், ஹாஜிகளுக்கும் பாராட்டும் வாழ்த்துகளும் வழங்கும்போதும், கஷ்புன்நுசூர் முன்னாள் மாணவர்கள் மன்றம் துவக்க விழா என நடைபெற்றது. இதில் தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது
 
 
   
  
அதன் பிறகு சிறப்பு சொற்பொழிவு மெளலானா மெளலவி ஹாபிழ் அல்ஹாஜ். A.U. அபூபக்கர் (உஸ்மானி) ஹஜ்ரத் அவர்கள் பேசும்போது இஸ்லாமிய இளைஞர்கள் பற்றியும் ரமலானை பற்றியும் மிக தெளிவாக உரை ஆற்றினார். 
 
அதன் தொடர்ச்சியாக மதரஸா மாணவர்களின் பட்டிமன்றம் நிகழ்வு தொடங்கியது. தலைப்பு - குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி தருவது பணமா? பாசமா?  நடுவர் - மெளலவி ஹாபிழ் அப்ஜலுல் உலமா M.N.M.முஹம்மது இல்யாஸ் M.A.,B.G.L., அவர்கள் தலைமை தங்கினார். 

இருபக்கமும் மாணவர்கள் தங்கள் வாதத்தை ஒரு பக்கம் வைக்க நடுவர் ஒரு பக்கம் காமெடி செய்ய விழா மேடை ஒரே நகைச்சுவை இடமாக ஆகியது. பட்டிமன்றம் இறுதி வரை அருமையாக சென்றது. இறுதியாக நடுவர் அவர்கள் உலகில் சில விசயங்களை நமக்கு எடுத்து உரைத்து தனது தீர்ப்புனை அளித்தார். குடும்பத்தில் அதிக மகிழ்ச்சி தருவது பாசம் என தீர்ப்பு அளித்தார்.
 
இறுதியாக A. முஹம்மது பாசித் BE நன்றியுரை நிகழ்த்த, துஆவுடன் விழா நிறைவுற்றது. அதன் பின் இஷா தொழுகை நடைப்பெற்றது.

நமது ஊரில் வருடம் வருடம் சிறப்பாக நடைப்பெற்று வரும் மதரஸா ஆண்டு விழா இந்த வருடமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமதூர் இஸலாமிய மக்கள் இதில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். 
 
ஆண்டு விழா புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு... இதோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 மேடையில் பேசிய மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் போது சில புகைப்படங்கள் உங்களுக்காக.... 
         
 
  
  
   
   
   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top