Mohamed Farook Mohamed Farook Author
Title: அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து எறிவோம் - சவூதி அரேபியா கடும் எச்சரிக்கை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜித்தாஹ் மாநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்...
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் கடற்கரை நகரமான ஜித்தாஹ் மாநகரில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நேற்று மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல்வேறு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான சௌத் அல் பைசல் இஸ்ரேலை கடுமையாக தாக்கி பேசினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது….
எந்த ஒரு சமுதாயமும் தன்னை தானே மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அவர்களுடைய விதியை மாற்றுவதில்லை என்று திருக்குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஓர் உடலை போன்று இருக்க வேண்டும். உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் எப்படி மற்ற பகுதி துடிக்கிறதோ அதேபோல் ஒரு முஸ்லிம் நாடு பாதிக்கப்பட்டால் மற்ற நாடுகள் துடிக்க வேண்டும் என்று கூறிய அவர் இஸ்ரேலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என்று கூறினார்.
இன்று நாம் ஒருவருக்கொருவர் பிரிந்து இருப்பதால் தான் இஸ்ரேல் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.

இதுதான் நமது பலவீனம், பிரிந்து கிடக்காமல் ஒன்று சேர்ந்தால் அனைத்து பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கமுடியும், அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து விடவும் முடியும் என்று கூறினார்.

பாலஸ்தீன் மீது கை வைக்க இஸ்ரேலுக்கு எந்த உரிமையும் கிடையாது. எந்த அருகதையும் கிடையாது. பலமுறை ஹமாஸ் சமாதான உடன்படிக்கைக்கு வருகை தந்தும் அதை இஸ்ரேல் முழுமையாக மறுத்துள்ளது, அதற்காக இஸ்ரேல் வெட்கப்படவும் இல்லை.

இஸ்ரேல் தன்னைத்தானே காட்டுக் கொள்கிறது என்று மேற்கத்திய நாடுகள் கூறுமேயானால் அதையே ஹமாஸ் தம்முடைய சொந்த மக்களை காப்பது மட்டும் தவறாகி விடுமா என்று கடுமையாக பேசினார்.

இஸ்ரேல் பாலஸ்தீன் மண்ணை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பெயர் தன்னை தானே தற்காத்து கொள்கிறோம் என்று கூறி வருகிறது.
ஐநா சபையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 29 நாடுகள் இஸ்ரேல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வாக்குப்பதிவு செய்த போது 17 நாடுகள் யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகுத்தது.

இஸ்ரேல் மீது விசாரணை நடத்தக்கூடாது என்று எதிராக வாக்களித்த ஒரே நாடான அமெரிக்கா மீது நாங்கள் வருத்தத்தில் இருக்கிறோம். அமெரிக்காவின் இது போன்ற செயலால் இஸ்ரேலுக்கு இன்னும் ஊக்கமளிக்கும், சர்வதேச சட்டத்தை மீற வழிவகுக்கும் என்று அமெரிக்காவையும் சாடி பேசினார்.

இஸ்லாமிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் இஸ்ரேலை கடுமையாக கண்டித்து பாலஸ்தீனுக்கு செல்லக்கூடிய பாதைகளை திறந்து விட்டு பாலஸ்தீன மக்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் சவூதி அரேபியா அரசாங்கம் தனது நிதியிலிருந்து 500 மில்லியன் டாலரை பாலஸ்தீன் மீள் கட்டுமானத்திற்காக வழங்குகிறோம் என்றும் 300 மில்லியன் டாலரை மருத்துவ உதவியாக வழங்குகிறோம் என்றும் கூறியுள்ளார்.

அப்பொழுது பாலஸ்தீனம் ஜெருசலத்தில் உள்ள முதல் கிப்லாவான புனித ஆலயம் பைத்துல் முகத்தஸை எவ்வித தடையும் இன்றி பாதுகாக்கப்படும் என்று சவூதி அரேபியா மன்னர் அப்துல்லாஹ்வால் உருதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

  1. இஸ்ரேலுக்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்களை மிகவும் சந்தோசமாக வரவேற்கிறோம்...

    அந்த கருத்துக்கள் வெறும் வார்த்தைகளாக இருக்குமா என்பதுதான் எமது கேள்வி.

    இஸ்ரேலுக்கு எதிராக நீங்கள் செயற்படுவதானால் அவர்களோடு சண்டையிட்டு ஒருக்காலும் இப்போதிருக்கும் முஸ்லிம் உலகம் வெற்றியடைய முடியாது. ஏனெனில் உங்களிடமிருக்கும் பலத்தைவிட பலமடங்கு பலமுடையவர்களாக இஸ்ரேல் இருக்கிறது அது மட்டுமன்றி மேற்குலகும் அவர்களோடுதான் இருக்கிறது.

    அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமாயின் அசைக்க முடியாத அல்லாஹ்வின் உதவி வேண்டும். அதை எவ்வாறு பெறுவது என்பதை முதலில் சிந்தியுங்கள்.

    அல்லாஹ்வின் உதவி நேரடியாக கிடைக்காது அதற்க்கு உங்கள் பூரண தந்த்ரோபாயத்துடனான இடையறாத தூய நோக்கமற்ற வேறு யாரையும் நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

    இவ்விடத்தில் பதர் யுத்தத்திற்கு முன் நபி (ஸல்) அவர்கள் குரைசிக் காபிர்களின் பொருளாதாரத்தை முடக்க முயற்சித்ததை இங்கு நினைவூட்ட முயல்கிறேன்.

    அதே பாணியில் இஸ்ரேலின் பொருளாதாரத்தை முடக்க 100% முயன்று பாருங்கள் இன் ஷா அல்லாஹ் பாதி இஸ்ரேல் முடங்கிவிடும். அவர்களது 70% மான வருமானம் முஸ்லிம் நாடுகளில் இருந்துதான் செல்கிறது முதலில் அதைச் செய்யுங்கள்.

    எல்லா முஸ்லிம் நாடுகளிலும் உள்ள அவர்களின் உற்பத்தியைத் தடை செய்யுங்கள். Coca Cola, Pepsi, Fanta, Mirinda, 7up, Nestle company, Mc Donald, All Cicrets, இன்னும் ஏராளமான பொருட்களுக்கு முஸ்லிம்கள் விசேடமாக அரபுக்கள் அடிமையாகி உள்ளனர். முதலில் அவற்றை உடனடியாக தடை செய்யுங்கள் உங்கள் வாக்கில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.....

    பதிலளிநீக்கு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top