vkrnajur vkrnajur Author
Title: புனித ரமழான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவு..!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தே ர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்கப்படக் கூடாதெனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில...
தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்கப்படக் கூடாதெனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்கும் ரமழான் மாதமாகையால் அம்மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்கும் பின்பு நடத்துமாறும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முஸ்லிம்களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்பட விசேட மத கிரியைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
து தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, அவர் பின்வருமாறு தெரிவித்தார்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்தப்படுவதற்கே திட்டமிடப்பட்டிருந்தது. எல்லை நிர்ணய முறைப்பாடுகளும் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

எல்லை நிர்ணய அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் கையளிப்பதற்கு அதற்கென நியமிக்கப்பட்ட குழு திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முஸ்லிம்களின் புனித நோன்பு மாதமாகையால் ஜூனில் தேர்தலை நடாத்தவேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை வேண்டியுள்ளார்.

அதனால் எதிர்வரும் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படமாட்டாது. தாமதித்தே நடாத்தப்படும் என தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top