Mohamed Farook Mohamed Farook Author
Title: தும்மல் வந்தால் அடக்கலாமா? ஓர் எச்சரிக்கை!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோம். நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள அல்லது சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாக...
ஒவ்வொருமுறை நாம் தும்மும்போதும் மறுபிறவி எடுக்கிறோம். நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள அல்லது சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.

மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத தூசிகள், துகள்கள் நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.நுரையீரலில் இருந்து வெளிப்படும் தும்மல் காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும். உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.

ஆனால், அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர். அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்க வேண்டும்.

அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும். ஆனால், இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.

அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்து கொள்ள வேண்டும். சுண்டுவிரல் தானே அதனால் என்ன செய்யமுடியும் என நினைக்காதீர்.மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது.

தும்மலைப் பற்றி ஒரு வினோத உண்மை தெரியுமா? நாம் ஒவ்வொரு முறையும் தும்மும் போதும் ஒரு மைக்ரோ செகெண்ட் நமது இதயம் நின்று துடிக்கிறது. ஆம். ஒவ்வொருமுறையும் தும்மும்போதும் ஒரு தடவை இறந்து மறுபடியும் உயிர்ப் பெறுகிறோம். இது லண்டனில் உள்ள மருத்துவர்களின் ஆராய்ச்சியின் மூலம் வெளிவந்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top