Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதிக்கு ஹஜ் செய்ய மக்களை அனுப்ப மாட்டோம் – ஈரான்
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இந்த வருடம் ஈரான் அதன் குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவூதி அரேபியாவிற்கு அனுப்பாது என இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவ...
இந்த வருடம் ஈரான் அதன் குடிமக்களை ஹஜ் வழிபாட்டிற்காக சவூதி அரேபியாவிற்கு அனுப்பாது என இரானின் பண்பாட்டு துறை அமைச்சர் அலி ஜன்னடி தெரிவித்துள்ளார்.

சவூதி அதிகாரிகள் ஈரானிய புனித யாத்ரிகர்களின் பங்களிப்பிற்கு இடையூறு விளைவிப்பதால் அது சாத்தியமற்றது என அவர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் ஹஜ் பயணத்தின்போது, ஈரானியர்கள் பலர் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான புனித யாத்திரிகர்கள் மோசமான கூட்ட நெரிசலில் சிக்கி கொல்லப்பட்டனர் .

இச்சம்பவத்திற்கு ஈரான் சவுதி அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
சிரியா மற்றும் ஏமன் உட்பட பல்வேறு போர் பகுதிகளில் இந்த இரு பிராந்திய போட்டி நாடுகளும் வெவ்வேறு நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால் இரான் மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையேயான பதற்ற நிலை அதிகரித்துக் கொண்டு வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top