vkrnajur vkrnajur Author
Title: சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த இளம்பெண் கொலை.!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த வீட்டின் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட ச...
சவுதி அரேபியாவில் வீட்டு வேலை செய்து வந்த ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அந்த வீட்டின் முதலாளியால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஐதராபாத்தின் தபீர்புரா பகுதியில் இருக்கும் ஷா காலனியை சேர்ந்த அசிமா காத்தூன் என்பவர் ஏஜெண்ட் மூலம் வீட்டு வேலை செய்வதற்கான விசா வாங்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது முதலாளியான அப்துல் ரஹ்மான் அலி முகமது என்பவர்  அசிமாவின் விசா காலமான 90 நாட்கள் முடிந்த பிறகு சட்டவிரோதமாக அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். ரியாத் சென்றதில் இருந்து அசிமா பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் அவரது குடும்பத்தார் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போன் செய்த அசிமா முதலாளி தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்வதாகவும், தன்னை இங்கிருந்து எப்படியாவது காப்பாற்றுமாறும் கூறி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் ரியாத்தில் இருந்து அசிமாவின் வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அசிமா இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்டு தருமாறு தெலுங்கான அரசு மத்திய அரசிற்கு வலியுறுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top