Mohamed Farook Mohamed Farook Author
Title: வாட்ஸ்ஆப் கோல்ட் அப்கிரேட் வந்தால் உஷார்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர...
வாஸ்ட்ஆப்பில் வாட்ஸ்ஆப் கோல்டு அப்கிரேடு என்று ஏதாவது வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்ஆப் வந்துவிட்டதை அடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கம் மலையேறிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோருக்கு வாட்ஸ்ஆப் கோல்டுக்கு அப்கிரேட் செய்கிறோம் என்று கூறி மெசேஜ் மூலம் ஒரு லிங்க் வருகிறது. முன்பு எல்லாம் பிரபலங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் கோல்டு தற்போது அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

இந்த அப்கிரேட் மூலம் இலவச அழைப்புகள், புதிய தீம்கள், புகைப்படங்களை பல்க்காக அனுப்பும் வசதி என ஏகப்பட்ட வசதிகள் உள்ளது என்று கூறுகிறார்கள். இதை நம்பி வாட்ஸ்ஆப் கோல்டை டவுன்லோடு செய்தால் அந்த ஆப்பில் உள்ள கோடு(code) உங்கள் போனை தாக்கி அதில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது.

முன்னதாக வாஸ்ட்ஆப் பிளஸ் என்ற பெயரில் ஏமாற்றினார்கள். தற்போது வாட்ஸ்ஆப் கோல்டு என்ற பெயரில் ஏமாற்றுகிறார்கள். உஷார் மக்களே உஷார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top