Mohammed Farook Mohammed Farook Author
Title: நல்லவேளையாக விஜயகாந்த் திமுகவில் இணையவில்லை : மு.க.ஸ்டாலின் பேட்டி
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நல்லவேளையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இல்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.   மு.க.ஸ்டாலின் சம...
நல்லவேளையாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இல்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மு.க.ஸ்டாலின் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது தேமுதிகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்தது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு ஸ்டாலின் பதிலளிக்கையில் “நல்லவேளையாக விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணையவில்லை. தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் நடந்து கொள்ளும் விதங்கள் பற்றி வெளிவரும் செய்திகளையும், விமர்சனங்களையும் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.
 
ஒருவேளை அவர் எங்கள் கூட்டணியில் இணைத்திருந்தால், அவரின் செயல்களுக்கு எல்லாம் நாங்களும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்” என்று கூறினார்.
 
விஜயகாந்த் இதற்கு முன்புதான் அப்படித்தான் நடந்து கொள்வார். அது உங்களுக்கு தெரியாமலா அவரை கூட்டணிக்கு அழைத்தீர்கள். உங்களுடன் கூட்டணி சேரவில்லை என்பதற்காக இப்படி சொல்கிறீர்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
 
அதற்கு பதிலளித்த அவர் “இப்போது மட்டுமில்லை. தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த இடைத் தேர்தல்களிலும், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக அழைப்பு விடுத்துள்ளது. அப்படி அழைப்பது ஒரு அரசியல் நடைமுறை. திமுகவின் அழைப்பை ஏற்காதது அவரின் விருப்பம்” என்று ஸ்டாலின் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top