Mohammed Farook Mohammed Farook Author
Title: அது துபாய் செல்லும் விமானம். ஒரு ஆலிம் அவர்கள் அதில் பயணம் செய்கிறார்.
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஒருவர் பக்கத்திலே வந்து சலாம் சொல்கிறார். என்னை தெரிகிறதா. நான்தான் இன்னார் மகன். து ஆ செய்யுங்கள் எனக்கு வயது வந்த ஒரு பெண்மகள் இருக்க...
ஒருவர் பக்கத்திலே வந்து சலாம் சொல்கிறார். என்னை தெரிகிறதா. நான்தான் இன்னார் மகன். து ஆ செய்யுங்கள் எனக்கு வயது வந்த ஒரு பெண்மகள் இருக்கிறாள்.

வீடு கட்ட வேண்டும் நகை செய்ய வேண்டும். வரதட்சணை கொடுக்க வேண்டும். ஊரில் வேலை இல்லை. துபாயில் வேலை தேடி செல்கிறேன். வேலை கிடைத்து என் கவலைகள் நீங்க து ஆ செய்யுங்கள்.

விழிநீரை துடைத்து விட்டு து ஆ செய்து அனுப்புகிறார் அந்த ஆலிம்.
கொஞ்ச நேரம் சென்று இன்னொரு நபர் வருகிறார். சலாம் சொல்கிறார்.

என்னை தெரிகிறதா, நான்தான் இன்னார் மகன். எனக்கு ஒரே ஒரு பெண்மகள். அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். நகைகள் துணிமணிகள் வாங்குவதற்காக துபாய் செல்கிறேன் . து ஆ செய்யுங்கள். கல்யாணத்துக்கு கார்ட் அனுப்புகிறேன். கண்டிப்பாக வாருங்கள்.

இன்ஷா அல்லாஹ் வருகிறேன் என்று ஆலிம் அவர்கள் பதில் சொல்லி அனுப்புகிறார். ஒரே விமானம். ஒரே ஆலிம். ஆனால் இரண்டு வேறுபட்ட செய்திகள். சமுதாயம் இப்படி போகிறதே என்ற கவலை ஆலிமுக்கு.

அவர் யாரிடம் போய் சொல்வார். அவர் யாருக்கு சலாம் சொல்லி தனது கவலையை பகிர்ந்து கொள்வார். அவர் துபாய் போவதே அவரது குமரை கரையேற்ற, நண்பர்களிடம் தெரிந்தவர்களிடம் வசூல் செய்ய போகிறார்.
சிந்தியுங்கள் சகோதரர்களே, சிரிப்பும் வருகிறது கவலையும் வருகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top