.

.
2/5/16

ன்றைய சவுதி கெஜட்டின் செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பொருளாதார மந்த நிலை காரணமாக உற்பத்தி பாதிப்பினால் கிட்டத்தட்ட 50000 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

நான்கு மாத சம்பளம் வேறு பலருக்கு பாக்கியிருக்கிறது. இதில் பாதிக்கப்படுவது அதிகம் இந்தியர்களே! அடி மட்ட தொழிலாளர்களிலிருந்து உயர் தர டெக்னீஷியன் வரை பணி புரிவது அதிகம் இந்தியர்களே! அதற்குள் நிலைமை சீரடைந்தால் இவர்கள் தப்புவார்கள். இல்லை என்றால் இந்தியாவை நோக்கி போக வேண்டியதுதான். 

இதனால் இந்திய பொருளாதாரமும் மிகப் பெரிய சிக்கலில் மாட்டும் அபாயம் உள்ளது. நம் நாட்டு அரசியல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்தாலும் பொருளாதாரம் சரிந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே அந்நிய செலாவணியாக நாம் மாதா மாதம் அனுப்பும் சம்பள பணங்களே! பின் லாடன் போன்ற பெரிய கம்பெனிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற கம்பெனிகளைப் பற்றி சொல்ல வேண்டாம்.

எனவே வளைகுடாவை நம்பியிருக்கும் குடும்பங்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு ஊரில் ஏதாவது தொழில் தொடங்க பணத்தை இப்போதே சேகரிக்க தொடங்குங்கள். 

எந்த நிலைமையையும் எதிர் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அமெரிக்க, இஸ்ரேலிய பிணந் தின்னி கழுகுகளால் மொத்த வளைகுடா நாடுகளும் அச்சத்தில் உள்ளன. இறைவன்தான் இந்த நிலையை சீராக்கி சகஜ நிலைக்கு வளைகுடா பொருளாதாரத்தை கொண்டு வர வேண்டும்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

LIVE CRICKET SCORE

நாணய மதிப்பு

Currency Converter
!-end>!-currency>