Mohamed Farook Mohamed Farook Author
Title: ஒரு ரன்னில் தோல்வி: பஞ்சாப் அணி பயிற்சியாளரை மோசமான வார்த்தையால் திட்டிய பிரீத்தி ஜிந்தா
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
ஐ.பி.எல். தொடரில் கடந்த திங்கள்கிழமை பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடின. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத...
ஐ.பி.எல். தொடரில் கடந்த திங்கள்கிழமை பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் விளையாடின. அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடிய பஞ்சாப் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால், இனி வரும் போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் கூட அடுத்த சுற்றுக்கு பஞ்சாப் அணியால் தகுதிப் பெற முடியாது. பஞ்சாப் அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததும், ஆந்திரமடைந்த பிரீத்தி ஜிந்தா வேகமாக பஞ்சாப் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு அமர்ந்திருக்கும் டக் அவுட்டிற்கு சென்று, அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சை பங்கரை ஒரு மோசமான ஆங்கில கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். அருகில் வெளிநாட்டு வீரர்களும், இளம் இந்திய வீரர்கள் இருக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அக்ஷார் படேலை பேட்டிங் செய்ய களமிறக்காததால் தான் பயிற்சியாளர் பங்கரை பிரீத்தி ஜிந்தா திட்டியதாக கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top