Mohamed Farook Mohamed Farook Author
Title: தமிழக ஆளுநர் ரோசய்யாவை பதவி நீக்க வேண்டும்: ராமதாஸ்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
தமிழக ஆளுநர் ரோசய்யா ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...
தமிழக ஆளுநர் ரோசய்யா ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தலை ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாக நடத்த வேண்டும் என ஆளுநர் ரோசய்யா பரிந்துரைத்திருப்பது, அவர் அதிமுக விசுவாசி என்பதைக் காட்டுவதாக கூறியிருக்கிறார்.

இரு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா விவகாரத்தில், அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி பாமக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது ஆளுநர் இவ்விஷயத்தில் தலையிடுவது எப்படி நியாயமானதாக இருக்கும் என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரின் செயல்பாடுகள், ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், அவரது பரிந்துரையை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஜனநாயகப்படுகொலைக்கு துணைபோகும் ஆளுநர் ரோசய்யாவையும், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top