vkrnajur vkrnajur Author
Title: ஓட்டுப் போட பூத் ஸ்லிப் வாங்கிட்டீங்களா? : இன்றே கடைசி நாள் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க,  பூத் ஸ்லிப்பை (வாக்குசாவடி சீட்டு) பெற இன்றே கடைசி நாள் என்றும், அதன்பின் வழங்கப்படாது என்றும் தம...
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க,  பூத் ஸ்லிப்பை (வாக்குசாவடி சீட்டு) பெற இன்றே கடைசி நாள் என்றும், அதன்பின் வழங்கப்படாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். 
  

இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜேஷ் லக்கானி “வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப்புகள் வழங்கும் பணி மே 5ல் தொடங்கப்பட்டது. பூட்டியிருந்த வீடுகளில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்படவில்லை.  
அப்படி விடுபட்டவர்களுக்கு, தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளில் பூத் ஸ்லிப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், யாரும் பெறாத அந்த சீட்டுகளை பயன்படுத்தி ஏராளமான கள்ள ஓட்டு போடப்படுவதாக, இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் புகார்கள் எழுந்தன. அதனால், வாக்குச் சாவடிகளில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட மாட்டாது.  
பூத் ஸ்லிப் வாங்க இன்றே கடைசி நாள். அப்படி பெறப்படாத பூத் ஸ்லிப்புகளை சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top