vkrnajur vkrnajur Author
Title: துருக்கியில் இஸ்லாமிய சார்பு, அரசியலமைப்பு வருகிறது..?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
துருக்கி ஒரு முஸ்லிம் நாடு என்பதால் அதன் புதிய அரசியலமைப்பில் மதச்சார்பின்மையை நீக்க வேண்டும் என்று ஆளும் ஏ.கே. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள...
துருக்கி ஒரு முஸ்லிம் நாடு என்பதால் அதன் புதிய அரசியலமைப்பில் மதச்சார்பின்மையை நீக்க வேண்டும் என்று ஆளும் ஏ.கே. கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர்.


அரசியலமைப்பு வரைபை மேற்பார்வையிடுபவரான சபாநாயகர் இஸ்மைல் கஹ்ராமான், மதச்சார்பான அரசிலமைப்போன்று வரையப்பட வேண்டும் என்று செவ்வாயன்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும் மதச்சார்பின்மை பெறுமானங்களை அகற்றுவது குறித்து ஏ.கே. கட்சி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று அரசியலமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

1920களில் இருந்து துருக்கி அரசியலமைப்பில் மதச்சார்பின்மை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஆளும் ஏ.கே. கட்சி நாட்டில் இஸ்லாமிய நடைமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாடசாலைகள்

மற்றும் சிவில் சேவைகளில் பெண்கள் பர்தா அணிய விதிக்கப்பட்ட தடையை அகற்றிய அரசு மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதித்ததோடு பல்கலைக்கழகங்களில் கலப்பு பாலின தங்குமிடங்களுக்கும் தடைவிதித்தது.

ஏ.கே. கட்சி பாராளுமன்றத்தில் 550 ஆசனங்களில் 317 இடங்களை பெற்றுள்ளது. அரசியலமைப்பு வரைபு மீது சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல 330 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் ஏனைய கட்சிகளினதும் ஆதரவை பெற ஏ.கே. கட்சி ஏதிர்பார்த்துள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top