Mohammed Farook Mohammed Farook Author
Title: சென்னையில் புயல்: மணிக்கு 60.கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேர்த்தில் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்யும் என சென்னை ...
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் அடுத்த 24 மணி நேர்த்தில் 60 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதாலும், அது புயலாக மாறியதாலும் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அதிகபட்சமாக 70 கி.மீ வேகத்திலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ வேகத்திலும் புயல் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 72 மணி நேரம் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் எனவும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top