Mohamed Farook Mohamed Farook Author
Title: 30 மாணவ, மாணவிகளூக்கு தலா 99 சவுக்கடி தண்டனை – ஈரான் உத்தரவு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
30 மாணவ-மாணவிகளூக்கு தலா 99 சவுக்கடி தண்டனை – ஈரான் நீதிபதி உத்தரவு! ஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப...
30 மாணவ-மாணவிகளூக்கு தலா 99 சவுக்கடி தண்டனை – ஈரான் நீதிபதி உத்தரவு!
ஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு பகுதியில் உள்ள குயாஷ்வின் நகரில் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகள் 30-க்கும் மேற்பட்டோர் ஒரு பங்களாவில் கூடி விருந்து நிகழ்ச்சி நடத்தினர்.

ஆட்டம் பாட்டம் அமர்க்களப்பட்டது. அது இடையூறாக இருப்பதாக கூடி அப்பகுதிமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கு வந்த போலீசார் விருந்தில் பங்கேற்ற 30 மாணவ மாணவிகளை கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

அப்போது விருந்தில் பங்கேற்றவர்கள் அனைவரும் அரை நிர்வாணமாக இருந்ததாகவும், மது அருந்தி விட்டு கும்மாளமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்து.

ஈரான் நாட்டில் இஸ்லாமிய சட்டம் கடைபிடிக்ப்படுகிறது. அதன் நன்னடத்தைக்கு எதிராக மாணவ, மாணவிகள் செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. எனவே, அவர்களுக்கு தலா 99 சவுக்கடி தண்டனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top