vkrnajur vkrnajur Author
Title: உவைஸியின் முதல் எழுச்சியுரை வாணியம்பாடியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம்.!(PHOTOS)
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அகில இந்திய அளவில் அரசியலை தூர்வாரிக்கொண்டிருக்கும் மஜ்லீஸ் கட்சியின் சார்பில் தமிழக 2016 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகு...
அகில இந்திய அளவில் அரசியலை தூர்வாரிக்கொண்டிருக்கும் மஜ்லீஸ் கட்சியின் சார்பில் தமிழக 2016 சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் முதல் பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு மஜ்லீஸ் கட்சியின் தேசிய தலைவர் அசத்துத்தீன் உவைஸி தலைமை தாங்கினார்.

நீண்ட காலமாக அசத்துத்தீன் உவைஸி தமிழகத்திற்கு வரவேண்டும் என்பதை மஜ்லீஸ் கட்சி தொண்டர்களை தாண்டி சமுதாய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தையும், பேரெழுச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அவரது வருகை குறித்து திடீர் அறிவிப்பு வெளியானவுடன் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், அண்டை மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாணியம்பாடியில் குவிந்தனர்.
அசத்துத்தீன் உவைஸியின் மொழி புரிகிறதோ இல்லையோ அவருடைய உரையை கேட்க, அவரது முகத்தை பார்க்க வாணியம்பாடியில் வரலாறு காணாத அளவில் மக்கள் திரண்டு பேரெழுச்சியை ஏற்படுத்தி விட்டனர்.
அசத்துத்தீன் உவைஸி வருகையால் வாணியம்பாடி விழாக்கோலம் பூண்டிருந்தது.




About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top