Mohammed Farook Mohammed Farook Author
Title: தேர்தலில் போட்டியிடவில்லை என்ற வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது; திருமாவளவன்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தேர்தலில் போட்டியிடவில்லை என்ற வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. வைகோ தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறு...
தேர்தலில் போட்டியிடவில்லை என்ற வைகோவின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. வைகோ தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் கூறியதாவது:
“சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட தலைவர் வைகோ. சாதி மோதல் தவிர்க்கும் வகையில் போட்டியிடப் போவதில்லை என்று வைகோ கூறியுள்ளார்.

எதிர்க் கட்சியைச் சார்ந்த நான்கு அல்லது ஐந்து பேர் வைகோவுக்கு எதிராக கருத்து சொல்வதால் அது சமூகம் சொல்கிற கருத்தாக முடியாது. அதனால் ஆற்றல் மிக்க தலைவர் வைகோ தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும். சட்டப் பேரவைக்கு வைகோ செல்லவேண்டும்.
முதல்வர் ஆக வாய்ப்பு இல்லாததால்தான் வைகோ வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறுவது அபத்தமானது. அவதூறானது.
எதிர்க் கட்சிகள் வைகோவுக்கு எதிராக அவதூறு பரப்பி, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள்.

மக்கள் நலக் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. நாளுக்கு நாள் மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது” என்று திருமாவளவன் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top