காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: கஃபாவில் மதாப் பாலத்தின் ஒரு பகுதி நீக்கப்பட்ட பின் கண்கொள்ளாகாட்சி! புகைப்படம்!!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
புனித கஃபாவை வலம் வருவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை வரும் மே 27இல் பூர்த்த...
புனித கஃபாவை வலம் வருவதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை வரும் மே 27இல் பூர்த்தி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கா பெரிய பள்ளிவாசலின் விரிவுபடுத்தும் பணியின்போது அங்கு ஒன்றுகூடும் யாத்திரிகர்களின் நெரிசலை குறைக்கவே கடந்த 2013 ஓகஸ்ட்டில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் அமைக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகி இருப்பதாகவும் அது அகற்றப்படும் நேரம் வந்துவிட்டதாகவும் கஃபாவை வலம்வரும் பகுதியின் தொழில்நுட்பக் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த பணிகள் புனித ரமழானுக்கு முன்னர் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கஃபா வலம்வரும் பகுதியின் விரிவுபடுத்தும் பணிகள் பூர்த்தியாகி இருக்கும் நிலையிலேயே இந்த பாலம் அவசியமற்றதாகியுள்ளது. கஃபாவை வலம்வரும் பகுதியில் விரிவாக்கல் பணிகளுக்கு பின்னர் அங்கு மணிக்கு சுமார் 107,000 யாத்திரிகர்களுக்கு கஃபாவை வலம் வர முடியுமாக இருக்கும்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top