Mohammed Farook Mohammed Farook Author
Title: உளுந்தூர்பேட்டையில் ம.ம.க.போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
உளுந்தூர்பேட்டையில் ம.ம.க.போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு! மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் திருப்பி அளித்...
உளுந்தூர்பேட்டையில் ம.ம.க.போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு!

மனித நேய மக்கள் கட்சி உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடம் திருப்பி அளித்துள்ளது. அத்தொகுதியில் திமுக சார்பில் வசந்தவேல் போட்டியிடுவார் என திமுக அறிவித்துள்ளது.

நடைபெறவிருக்கும் தமிழக தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடமே திருப்பி அளித்துவிட்டதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா அறிவித்தார்.

இன்று மாலை திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜவகிருல்லா, உளுந்தூர்பேட்டை தொகுதியை திமுகவிடமே திருப்பி அளித்துவிட்டதாகக் கூறினார்.

எனினும், திருப்பி அளித்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் திருநாவலூர் ஒன்றியத்தின் துணைத் தலைவர் வசந்தவேல் போட்டியிடுவார் என திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதனால் வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே மனித நேய மக்கள் கட்சி தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: ராமநாதபுரம் - எம்.எச்.ஜவாகிருல்லா,
தொண்டாமுத்துர் - எம்.ஏ.செய்யது முஹம்மது, நாகப்பட்டிணம் - ஏ.எம்.ஜபருல்லா, ஆம்பூர்- வி.எம்.நஜீர் அஹமது. ஆம்பூர் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இருக்கும் அஸ்லாம் பாஷாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top