காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ”அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?”
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
ஒரு பெண் கூறினார்: “நான் தொழுகை நடாத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே ...
ஒரு பெண் கூறினார்: “நான் தொழுகை நடாத்திக்கொண்டு இருக்கும் போது எனது சிறிய மகள் என்னை நோக்கி வந்து திரும்ப திரும்ப என்னை அழைத்து கொண்டே இருந்தாள். நான் தொழுகையில் இருந்தமையால் அவளுக்கு பதில் கொடுக்கவில்லை

அந்த சமயம் என்னுடைய 6 வயது நிரம்பிய இளைய மகன் அங்கு வந்து என் மகளிடம் ‘உனக்கு வெட்கம் இல்லையா? அம்மா அல்லாஹ்விடம் பேசிக்கொண்டு இருக்கும் போது நீ எப்படி குறுக்கிடலாம்?’ என்றான்.
இவனுடைய வார்த்தையை கேட்ட நான் ஒருகணம் தளர்ந்துவிட்டு வெட்கம் அடைந்தேன். ஏனென்றால் நான் இதுவரை என்னுடைய தொழுகைகளை அவசர அவசரமாக தான் தொழுது வந்துள்ளேன். இவனுடைய இந்த வார்த்தை எனக்கு ஒரு விஷயத்தை புரிய வைத்தது.

உலகை ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அரசர்களுக்கெல்லாம் அரசனான என் ரப்பிடம் நான் பேசும் போது (தொழுகையின் போது) ஒவ்வொரு முறையும் எப்படி அவசர அவசரமாக கடமையை கழித்துவிட்டு செல்வது போல் தொழுகையை நிறைவேற்றி விட்டு சென்றுள்ளேன். இதில் நிச்ச்ச்சயம் எனது இறைவன் திருப்த்தி கொண்டிருப்பானா? என்று என்னை நானே எண்ணிக்கொண்டேன்

அன்றிலிருந்து ஒவ்வொரு தொழுகைக்கு செல்லும் போதும் என்னுடைய மகனின் அந்த வார்த்தையை நியபகப்படுத்தியே. ஒரு பயபக்த்தியுடைய தொழுகைக்காக தக்பீர் கட்டுவேன்.

சுபஹானல்லாஹ் ஒரு சில விஷயங்களை குழந்தைகள் மூலம் அல்லாஹு ரப்புல் ஆலமீன் மக்களுக்கு தெளிவு படுத்துகிறான் எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top