Mohammed Farook Mohammed Farook Author
Title: வேலைக்காக துபாய் செல்லும் பெண்களின் கவனத்திற்கு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
ஆட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, எத்தியோப்...
ஆட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்சுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பல பெண்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு வீட்டு வேலைகள் செய்யவும், உதவியாளர்களாகவும், அழகு கலை நிபுணர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் செல்கின்றனர்.

இவர்களில் பலரது பாஸ்போர்ட்கள் வேலை அளிப்பவர்களால் பறிக்கப்பட்டு கடுமையான வேலைகளில் உட்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு ஒழுங்காக கூலி கொடுப்பதில்லை. மாறாக அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளாகின்றனர்.

இதனால் ஆள் கடத்தலை தடுத்து நிறுத்துவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சுடன் இந்தியா ஒப்பந்தம் செய்வது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளிலும் ஆட்கள் கடத்தல் தடுப்பு பிரிவுகள் அமைக்கப்படும்.

இந்தப் பிரிவுகளுடன் ஆட்கள் கடத்தல் தொடர்பான தகவல்களை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் பகிர்ந்து கொள்வர். பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு தேவையான மறுவாழ்வு உதவிகள் விரைந்து செய்யப்படும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top